தொடர் மழை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னையின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…

சென்னையின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டது வானிலை ஆய்வு மையம்.

இதையும் படியுங்கள்:உத்தரகாண்ட்: சுரங்கத்தில் சிக்கியவர்களை இன்றைக்குள் மீட்க திட்டம்!

அதில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும், இன்றைய வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். 

அதனை தொடர்ந்து,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பின்னர், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.