பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு

பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், பேர்ணாம்பட்டு…

பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், பேர்ணாம்பட்டு தரைகாடு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள நில அதிர்வு மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வரவுள்ளதாக கோட்டாட்சியர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.