வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா

நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து அவருடன் லண்டன் சென்ற இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம், ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார்.…

நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து அவருடன் லண்டன் சென்ற இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம், ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு, லைகா புரொடக்சன்ஸ் முதன்மைச் செயல் அதிகாரி, ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர்.

இயக்குநர் சுராஜ், வடிவேலு, தமிழ்க்குமரன்

இந்நிலையில் சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதால், உடனடியாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருடன் லண்டன் சென்ற இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.