தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி…

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி தற்போது சற்றே குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 2.09,918 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் 959 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக 2.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,13,02,440 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2.62 லட்சம் பேர் குணமடைந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,89,76,122 ஆக உயர்ந்துள்ளது. 959 பேர் இறந்துள்ளதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 4,95,050 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் 18,31,268 ஆக உள்ளதென மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.