முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆன  இன்று முதல் பிப்ரவரி 11வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த கூட்டத்தொடருக்கு வரவேற்கிறேன். உலகளவில் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்பொழுது தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை இந்த ஆண்டிற்கான மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் ஆனதாகும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும்” – இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்

Janani

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என நினைத்ததில்லை-தமிழிசை செளந்தரராஜன்

Web Editor