மீண்டும் ‘V’ செண்டிமெண்ட்…. – AK62 படத்தின் டைட்டில் இதுதான்; அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம்…

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படியுங்கள் : BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை….. 

இதையடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து, அஜித்தின் 62வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/LycaProductions/status/1652742173618589696?t=Yu70bwYwbCra3Kj_vMAqag&s=08

உழைப்பாளர் தினமான இன்று, அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு AK62 படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. ’விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள AK62 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய வரிசையில் தற்போது விடாமுயற்சி என தனது ‘V’ சென்டிமென்ட்டை நடிகர் அஜித்குமார் தொடர்வதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.