ஐபிஎஸ் கிரிக்கெட் தொடர் 2023ல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 62 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார்.
இதையும் படியுங்கள் : BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை…..
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். இவ்வாறு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.







