நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர்.




