நியவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சிறுதானிய உற்பத்தியில், முதலிடத்தில் உள்ள இந்தியா, 2023ம் ஆண்டை சிறப்பாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத ஒரு பகுதியாக தமிழ் ஆராய்ச்சி கழகம், டான் மில்லட் அமைப்பு, கோவை நிர்மலா கல்லுாரி ஆகியவை இணைந்து சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழக சிறுதானிய மாநாடு – 2023 என்ற தலைப்பில் இரண்டு நாள் சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்கியுள்ளது.
உலக சாதனை முயற்சியாக, 555 மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கோவை நிர்மலா பெண்கள் கல்லுாரியில் இன்று தொடங்கியுள்ள சர்வதேச சிறுதானிய கண்காட்சி மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி மாணவர்கள் பேக்கரிகளில் உள்ள உணவுப் பொருட்களுக்கு பதில் சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என கேட்க்கொண்டார். முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் சிறுதானியங்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காக தர்மரி,நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு இந்த ஆண்டு முதல் வழங்கபடுகிறது.வரும் ஆண்டுகளில் அரசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார் .மேலும் நோய்களை கட்டுப்படுத்த மக்கள் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து அதிக அளவிலான சிறுதானிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றதன் அடிப்படையில் இந்த சிறுதானிய கண்காட்சி உலக சாதனையில் இடம்பெற்றது. அமெரிக்காவின் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ பதிவு மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் உலக சாதனை சான்றிதழை வழங்கினார். இந்த சான்றிதழை தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பெற்றுக் கொண்டார்.
பின்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்ரபாணி கூறியதாவது,
2.19 கோடி மக்கள் குடும்ப அட்டைதார்களுக்கும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தமிழக முதலவர் துவங்கி வைக்க உள்ளார். பொருளை வாங்க முடியாதவர்கள் 16- ம் தேதி பொருட்களை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
நியவிலைக்கடைகளில் தேங்காய் என்னை வழங்க கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்திருக்கிறார். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சக்ரபாணி கூறியுள்ளார்.