முக்கியச் செய்திகள் தமிழகம்

என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக நடைப் பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ்,  காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தைக் கொண்டு வந்தால் கூட நாங்கள் நிலத்தை கொடுக்கமாட்டோம் என தெரிவித்தார்.

கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், என்.எல்.சியை வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைப் பயணம் மேற்கொள்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வின் தொடக்கமாக மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், முப்போகம் விளையும் 25000 ஏக்கர் விளைநிலத்தைக் காப்பாற்றத் தான் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இது இந்த 49 கிராம பிரச்சினை இல்லை. இந்த மாவட்டத்தின் பிரச்சினை.66 ஆண்டுக்கு முன் நிலம் கொடுத்த அவர்களுக்கே இன்னும் பட்டா வழங்கவில்லை. வேலை வழங்கவில்லை. இங்கு நான் ஓட்டு கேட்டு வரவில்லை. இப்பகுதியில் 10 அடியிலிருந்த தண்ணீர் இப்போது 1000அடிக்குச் சென்று விட்டது என பேசினார்.

அத்துடன், நிலக்கரி எடுக்க வருடம் 10 லட்சம் வருமானம் வரும். அதற்கு உங்கள் நிலம் தேவை இதற்கு இங்கு உள்ள எம்எல்ஏ, அமைச்சர்கள் துணைபோகிறார். இதில் வேளான் துறை அமைச்சர் விவசாயத்தைப் பாதுகாக்காமல் நிலத்தைப் பிடுங்கி என்எல்சி க்கு கொடுக்க பார்க்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், என்எல்சி யை 2025க்குள் தனியாருக்கு விறக்கபோவதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். தனியாருக்கு விற்ற பின் நிலம் எடுக்க முடியாது. இந்தியாவின் பெரிய A கம்பெனிக்கு கொடுக்க நிலம் கையகப்படுத்துகிறார்கள்.

அத்துடன், நிலம் கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருளில் மூழ்கும் என ஏமாற்றுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 18000 மெகாவாட். ஆனால் என்எல்சி மொத்த உற்பத்தி 2000 மெகாவாட். அதிலும் தமிழ்நாடாக்கு வழங்குவது வெறும் 800 மெகாவாட் மட்டும் தான். எனவே என்எல்சி இல்லை என்றால் இருளில் மூழ்காது என தெரிவித்தார்.

மேலும், இங்கு நமது நிலத்தை அழித்து நீர் வளத்தை அழித்து வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. ஆனால் இந்த மாவட்டம் இன்னும் முன்னேறவில்லை.இனி நாங்கள் ஏமாறமாட்டோம். இங்குள்ள அமைச்சகம் அல்லது நிலக்கரி துறை அமைச்சர் யாராவது என்எல்சி நிறுவனம் தனியாருக்கு விற்கப்படாது என எழுதித் தர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இடையில் எடுக்கப்பட்ட 300 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை. நீங்க ஐந்து கோடி இழப்பீடு கொடுத்தாலும் ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம். தமிழக அரசு கோவை அருகில் அன்னூர் கிராமத்தில் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் 1500 ஏக்கர் கையாகப்படுத்தக் கூடாது என போராடுகின்றனர். ஆனால் இங்கு 250000 ஏக்கர் எனக்கூடாது என போராடவில்லை. என்ன காரணம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் இங்கு வந்துள்ளேன் என அவர் கூறினார்.

மேலும், இந்த மாவட்டம் முழுவதும் பாதிக்கப்படப் போகிறது. எல்லோரும் வாருங்கள் இந்த என்எல்சி என்ற வில்லன் வேண்டாம். இங்கு வரும் வருமானத்தை 55 ஆயிரம் கோடி வெளி மாநிலங்களில் முதலீடு செய்கிறது என்எல்சி. நிலக்கரி எடுத்துப் பயன்படுத்தாத நிலத்தைக் கூட விவசாயிகளுக்குத் திருப்பி தர வில்லை என குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தைக் கொண்டு வந்தால் கூட நாங்கள் நிலத்தை கொடுக்கமாட்டோம். இதை முன்னிலைப் படுத்தித்தான் இன்று நான் பிரச்சார நடைப்பயணம் மேற்கொள்கிறேன் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்; விளக்கம் அளித்த விஜய்சேதுபதி!

Jayapriya

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த நியூஸ் 7 தமிழ் கோவை ஒளிப்பதிவாளரின் மகள்!

Web Editor

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்

EZHILARASAN D