அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




