முக்கியச் செய்திகள் இந்தியா

காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!

காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.


சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் கூடியுள்ளது.
மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று இணைப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே தலைவாரக தேர்வு செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டாா்.
ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அருணாசலப்பிரதேசம் முதல் குஜராத் வரையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான தீர்மானம் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்த்தில் கட்சியில் உயா்பதவிகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டுமா இல்லையா என முடிவு எடுக்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


காரியக் கமிட்டிக்கு தேர்தல் மூலமே உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இளைஞர்களும், நியமனம் மூலமே நடைபெற வேண்டும் என்று மூத்த தலைவர்களும் வலியுறுத்தி வருவதால் காந்தி குடும்பத்தினரின் தலையீடு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழிகாட்டுதல் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு பிற்பகலில் நடைபெறும் பிற அமர்வுகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

Halley Karthik

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீக்கம்

G SaravanaKumar

மகளிர் பிரீமியர் லீக் போட்டி; டெல்லி அணி அபார வெற்றி!

Jayasheeba