காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை என சசதரூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேதியை கட்சி தலைமை அறிவித்தது. வரும் வரும் 17-ம் தேதி இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
Surprised to get calls saying that “sources in Delhi” claim that I have withdrawn! I am on this race till the finish. #ThinkTomorrowThinkTharoor pic.twitter.com/zF3HZ8LtH5
— Shashi Tharoor (@ShashiTharoor) October 8, 2022
இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்தித்து ஆதரவுகோரி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் இன்று தேர்தலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. நான் இந்த தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை. இது தேர்தல் முடிவடையும் வரையிலான போராட்டம். இது கட்சிக்குள் இருக்கும் நட்பு ரீதியான போட்டியாக இருக்கிறது. அக்டோபர் 17ம் தேதி தயவு செய்து வந்து வாக்களிக்கவும்” என்று கூறியுள்ளார்.