காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் தலைமை  அறிவித்துள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக…

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் தலைமை  அறிவித்துள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ம் தேதிக்குள் திரும்பபெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 17-ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கேரளாவை சேர்ந்த சசி தரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.