முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘மிஸ் சென்னை திருநங்கை’ அழகிப் போட்டி

‘திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022’ நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ‘மிஸ் சென்னை திருநங்கை’ தேர்வு தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஆண், பெண் என இருபாலருக்கும் அவர்களது திறமையை வெளிப்படுத்த அழகு போட்டிகள் நடத்தப்படுவது போல, கடந்த சில வருடங்களாகவே திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக ‘மிஸ் சென்னை திருநங்கை’ அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள ‘திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022’ எனும் நிகழ்வு வரும் அக்டோபர் 15 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான “மிஸ் சென்னை திருநங்கை” அழகிப்போட்டிக்கான தேர்வு, சென்னை கீழ்ப்பாக்கம் தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூன்று நாட்கள் நடைபெறும் திருநங்கைகளின் முப்பெரும் விழாவிற்கு முன்னதாக அக்டோபர் 13 ஆம் தேதி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சியும், அக்டோபர் 14 ஆம் தேதி திருநங்கைகளுக்கான உடலின மாற்றத்திற்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதற்கான உதவிகள் குறித்த கருத்தரங்கமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மிஸ் சென்னை திருநங்கை நிகழ்ச்சிக்கான தேர்வில் 22 திருநங்கைகள் கலந்து கொண்டு, புகழ்பெற்ற பேஷன் கலைஞர்கள் முன்பு அணிவகுத்தனர். தொடர்ந்து பேசிய திருநங்கை அர்ச்சனா, வீட்டில் இருந்து பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் எங்களை போன்றோர்கள், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று அடுத்தடுத்து முன்னேறி, ஒரு அடையாளத்தை உருவாக்க செய்தால் எங்கள் மீதான மதிப்புக் கூடும். திருநங்கைகளின் பார்வையை இந்த உலகிற்கு வேறு கோணத்தில் மாற்ற வேண்டும் என்பது எனது எண்ணம். இந்திய அளவில் நான் இதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது எனக் கூறினார்.

தொடர்ந்துன் பேசிய அவர், 22 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் 12 பேர் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள “மிஸ் சென்னை திருநங்கை” இறுதிப் போட்டிக்கு நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொதுவாகவே திருநங்கைகள் மீதான பார்வை, ஒரு சார்பினரை மட்டுமே மையமாக கொண்டு, ஒட்டுமொத்த சமுதாயத்திலும் வேறொரு கோணத்தில் பார்க்கபட்டாலும், இந்த அழகிப் போட்டியில் பங்கேற்ற 10 க்கும் மேற்பட்டோர், நன்கு படித்தவர்களாகவும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களாகவும் இருக்கிறார்கள் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிராஹாசினி ( MBA பட்டதாரி ) நான் எனக்குள் இருக்கும் எனது மாற்றங்களை மறைத்து தான் கல்வி பயின்றேன், அதன் பின் ஒவ்வொரு நாளும் மறைத்து மறைத்து வாழ்ந்து, ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினரிடம் இதை சொன்ன பின், அவர்கள் என்னை கவுன்சிலிங் அழைத்து சென்றனர், நான் அவர்களை அழைத்து சென்றேன். ஒருகட்டத்தில் என் சொந்த முயற்சியால் படித்து, சம்பாதித்து, இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை பார்ப்பதுடன், என்னை போன்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.

போட்டி குறித்து நடுவர், சிந்தூரி கூறியதாவது, மிஸ் சென்னை திருநங்கை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று திருநங்கைகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், மிஸ் சென்னை திருநங்கை பட்டமும் வழங்கப்படும். இந்த போட்டி மூலம் இயல்பான வாழ்க்கைக்கு திருநங்கைகள் அடையாளப்படுத்த படுவார்கள். ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், இவர்களுக்காக அழகிப் போட்டிகள் நடத்தப்படுவதாகவும், வரும் காலங்களில் மாடலிங் உலகிலும் இவர்கள் சாதிக்க பல்வேறு வாய்ப்புகள், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி தரப்படுவதாகவும் தெரிவிக்கிறார் மாடல் அழகி மற்றும் நடுவர் சிந்தூரி.

 

ஒற்றுமையின் பால் ஒருவருக்கொருவர் சமம் என்று வாழும் இவ்வுலகில், மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகளும், சுதந்திரமும் அரசின் உதவிகளை கொண்டு அவ்வபோது அவர்களை மேம்படுத்தி வந்தாலும், சமுதாயத்தில் அவர்களின் மீதான பார்வையினை முற்றிலுமாக மாற்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகள் சக மக்களுடன் மக்களாக கலந்து வாழ்வதற்கு வழிவகுக்கிறது எனக் கூறினார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்நாட்டில் தங்க உற்பத்திக்கு அரசு ஆதரவு?

EZHILARASAN D

இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Dinesh A

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி

G SaravanaKumar