முக்கியச் செய்திகள் இந்தியா

’எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக பல கோடி செலவு செய்துள்ளது’ – ராகுல் காந்தி

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த ஒற்றுமை நடைபயணமானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சென்று நிறைவடையவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள படா கணபதி சதுக்கத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர் ஒருவரின் சைக்கிளை வாங்கி சிறிது தூரத்திற்கு ஓட்டிய ராகுல்காந்தி, பின்னர் தொண்டருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பெயருக்கு களங்கும் விளைவிக்க பாஜக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் மத்தியில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், பாஜகவினரின் செயல் தீங்கு விளைவிக்கும் செயல் என்பதை மக்கள் புரிந்துள்ளதாக குறிப்பிட்டார். தன் மீதான தனிப்பட்ட தாக்குதலே, தன்னை சரியான பாதையில் அழைத்து செல்வதாகவும் ராகுல்காந்தி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொலைநோக்குடன் எதிர்கால வளர்ச்சியை ஏற்படுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்- பிரதமர் மோடி

Jayasheeba

குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி

EZHILARASAN D

639 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan Chinnasamy