முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்று 23 தமிழக மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர் முயற்சிகளின் காரணமாக விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2வது அலையில் 3 ஆயிரம் கொரோனா இறப்புகள் மறைப்பு: மறு ஆய்வில் வெளிவந்த உண்மை!

Gayathri Venkatesan

பிரதமர் மோடிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி – கோவை செல்வராஜ் விமர்சனம்

Dinesh A

“தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்” – முத்தரசன்

G SaravanaKumar