சென்னை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.
இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – ராயப்பேட்டை கள நிலவரம்
மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்துகிறது.
அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளால் மாசு பிரச்னை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்த வேண்டும் என்பதும் மயிலாப்பூர் மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :








