முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் தப்பித்த “ட்ரோன்”-வைரல் வீடியோ!

முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் ட்ரோன் கேமரா தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அற்புதமான இயற்கைக் காட்சிகளையும், எதிர்பாராத தருணங்களையும் தத்ரூபமாக படம் பிடிப்பதில் ட்ரோன் கேமராக்களின் பங்களிப்பு அளப்பறியது. அந்த வகையில்,…

முதலையிடம் இருந்து நொடிப்பொழுதில் ட்ரோன் கேமரா தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அற்புதமான இயற்கைக் காட்சிகளையும், எதிர்பாராத தருணங்களையும் தத்ரூபமாக படம் பிடிப்பதில் ட்ரோன் கேமராக்களின் பங்களிப்பு அளப்பறியது. அந்த வகையில், நீர்நிலையில் உள்ள ஒரு முதலையை படம்பிடிக்கும் போது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

@reach_anupam என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ட்ரோன் கேமரா ஒரு நீர்நிலையின் மீது வட்டமிடுகிறது. அப்போது, அந்த நீர்நிலையின் மேல் இருந்த முதலை ட்ரோன் அருகில் வரும் போது அதன் தலையைத் தூக்குகிறது. ட்ரோனைப் பிடிக்கும் நோக்கத்தில் முதலை மேலே பாய்ந்து வருகிறது. அப்போது, ஒரு நொடியில் ட்ரோன் வேகமாக மேலே எழுந்து முதலையின் தாக்குதலில் இருந்து தப்பிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அருமையான வீடியோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ அமேசான் எக்ஸ்ப்ளோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் பகிரப்பட்டது. தங்களது வாடிக்கையாளர்கள் இருவர் இந்த அற்புதமான வீடியோவை எடுத்துள்ளனர் என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://twitter.com/reach_anupam/status/1627284641983102976

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.