”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – ராயப்பேட்டை கள நிலவரம்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளால், ராயப்பேட்டை பகுதி கள நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாகக் காணலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும்…

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளால், ராயப்பேட்டை பகுதி கள நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்துகிறது.

இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – வடபழனி,போரூர், கிண்டி பகுதிகளின் கள நிலவரம்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாத நிலையிலும், போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் மற்றும் மெட்ரோ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் காலை நேரத்திலேயே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

உடனடியாக போக்குவரத்து சிக்னல்களை சீர் செய்ய வேண்டும் என்பதும், அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருந்து, போக்குவரத்தை சீர்ப்படுத்த வேண்டும் என்பதும், ராயப்பேட்டை பகுதி மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

முழு வீடியோவைக் காண :

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.