சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகும் சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்துகிறது.
இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – தி.நகர் கள நிலவரம்
அந்த வகையில் சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறும் சாலைகளால், மிகுந்த சிக்கலை வாகன ஓட்டிகள் சந்தித்து வருவதாகவும், மந்த கதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகள் தீராத பிரச்னையாகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுகின்றது. அதேபோல் அரசுப் பேருந்துகள் தாமதமாகவே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும், அரசுப் பேருந்துகள் செல்வதற்கான மாற்றுப் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் கொளத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையாக அமைகின்றது.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :