மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி…

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் மு.அப்பாவு சட்டப்பேரவை கூட்டம் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.