IPL 2026 | கொல்கத்தா – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, மும்பை அணிகள் மோத உள்ளன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, மும்பை அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.

அதேவேளை, ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பு சரிந்து பிற அணிகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.