தமிழகம் பக்தி செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயிலின் கணினி வரைபடம் : ஒப்பந்தபுள்ளி வெளியீடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அனைத்து அம்சங்களையும் கணினி வரைபடம் மூலம் நவீன முறையில் ஆவணப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்நாடு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர்
வந்து செல்கின்றனர். பல நூறாண்டு பழமையும் சிறப்பும் வாய்ந்த இந்த கோயிலின்
கோபுரம், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

இந்த கோயிலின் சிறப்பம்சங்களை விளக்கக்கூடிய வகையில் வரைபடம் ஒன்றை வெளியிட பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை  வைக்க பெற்றது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரங்கள் மற்றும் கோயில்
வளாகம் முழுவதும் நவீன கணினி வரைபடமாக (Computer Diagram) தயாரிக்க கோயில்
நிர்வாகம் முடிவு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து,  கோயில் வளாகத்தில் இருக்க கூடிய கோபுரங்கள், நுழைவாயில்கள், கோயில்
விமானங்கள், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த
பகுதிகளை கணினி வரைபடமாக உருவாக்குவதற்காக ரூபாய் 4.5 லட்சம் மதிப்பில்
கோவில் நிர்வாகம் சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில்
ஒப்பந்தம் வழங்கப்படும். இத்தனை வரலாற்றுப் பெருமையும், ஆன்மிக சிறப்பும்
வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவில் திருத்தலத்தை வரைபடம் வாயிலாக பொதுமக்கள்
அனைவரும் காண்பதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

—-ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

Niruban Chakkaaravarthi

அதிகரித்து வரும் கொரோனா பரவல் – காரைக்கால் ஆட்சியர் அவசர ஆலோசனை!

Web Editor

’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!

Halley Karthik