’STR கரியரில் இந்த படம் மிகப்பெரிய மைல்ஸ்டோன்’ என ‘பத்து தல’ திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறினார்.
பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
அப்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மேடையில் பேசுகையில், ’சில்லுனு காதல் படத்துக்குப் பின் அவரோடு இணைவதில் அளவற்ற மகிழ்ச்சி. இந்த படம் கிருஷ்ணாவுக்கு மிகப்பெரிய வெற்றி அடையும். ரகுமான் சாருடன் 3வது படம். சில்லுனு ஒரு காதல், 24, பத்து தல, இன்னும் நிறையப் படங்கள் அவரோடு பணியாற்ற வேண்டும்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. நடிகை சாயிஷாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இந்த படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருக்கிறார். ஆர்யாவுக்கும் நன்றி. கவுதம் கார்த்திக்குக்கு நன்றி. இது கவுதம் கார்த்தியுடனான 4-வது படம். இன்னும் 40 படம் பணியாற்றினாலும் போர் அடிக்காத ஹீரோ. அவருடைய 1947 படத்துக்கு வாழ்த்துகள்.
STR எனக்காக இந்த படத்தில் ஆதரவு கொடுத்தார். இன்று மிக பெருமைப்படும் அளவுக்கு இந்த படம் வந்திருக்கிறது. STR கரியரில் இந்த படம் மிகப்பெரிய மைல்ஸ்டோன் என நம்புகிறேன். அடுத்த படம் கமல் சார் தயாரிப்பில், தொடர் வெற்றியைத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மேடையில் பேசினார்.