முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு: நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி

செங்கல்பட்டு அருகே பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நாளை முதல் வழக்கம் போல சென்னை-திருச்சி இடையே மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள இரண்டு மேம்பாலங்கள் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக சேதம் அடைந்தன. இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. எனவே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஆயிரகணக்கான வாகனங்கள் குறுகலான மாற்று சாலைகளில் திருப்பி விடப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு

இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது பாலத்தில் சீரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டு 18-ஆம் தேதி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால், நாளை மாலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணை

EZHILARASAN D

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

Saravana

காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

Gayathri Venkatesan