5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு உள்ளிட்ட 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு உதவித்தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் தொடர் செலவினமாக 124 கோடி ரூபாய் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2022-23ஆம் நிதியாண்டில் 2.15 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: மது போதையில், நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பன்
இதனை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மிகவும் குறைத்து வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக கூறினார். பிற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைவான உதவித்தொகை வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







