பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

தனது சூட்கேஸை திறக்குமாறு விமான பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டதை புகைப்படம் ஒன்றுடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி…

தனது சூட்கேஸை திறக்குமாறு விமான பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டதை புகைப்படம் ஒன்றுடன் சேர்த்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் நேற்று ஜெய்பூருக்கு சென்று திரும்பியுள்ளார். அப்பொழுது, ஜெய்பூர் விமான பாதுகாப்பு படையினர் அவரது சூட்கேஸில் சந்தேகப்படும் பொருள் இருப்பதாக நினைத்து சோதனை செய்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்த போக்குவரத்துத் துறை அதிகாரி போத்ரா தனது பையை திறந்து காட்டியுள்ளார். அதில் 40 கிலோ பட்டாணி காய்கள் இருந்ததை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள், பின்பு அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த ருசிகரமான நிகழ்வை அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து, “ஜெய்பூர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை திறக்கச் சொன்னார்கள்” என்ற வாசகத்துடன் ஏமாற்றமடைந்த தொனியிலான எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவு 60,000  லைக்குகளையும் கடந்த பலராலும் பகிரப்பட்டுவருகிறது. இந்த பதிவுக்கு சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவணிஷ் ஷரன், இதே போன்ற தனது அனுபவத்தையும் கமெண்ட் செய்து பகிர்ந்துள்ளார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஜெய்பூரிலிருந்து 1 கிலோ 40 ரூபாய் வீதம் 10 கிலோ பட்டாணியை வாங்கி வந்ததாக பதிலளித்துள்ளார் மற்றொரு ட்விட்டர் பயனர். இந்த பதிவிற்கு பதிலளித்த அருண் போத்ரா, தானும் 40 ரூபாய்க்குதான் வாங்கி வந்ததாக பதிலளித்துள்ளார். போக்குவரத்து அதிகாரியின் இந்த ட்விட்டர் பதிவு பலராலும் விரும்பத்தக்க பதிவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.