முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்-இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அரையிறுதிக்கும் இந்தியா தகுதி பெற்றது.

அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் தோல்வியைத் தழுவியது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணியை கடந்த 31ம் தேதி எதிர்கொண்டது.
அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், பார்படாஸும் மோதின.

இதில் பார்படாஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராட்ரிக்ஸ் 56 ரன்களும், ஷஃபாலி வர்மா 43 ரன்களும் எடுத்து அசத்தினார்.
தீப்தி ஷர்மா 34 ரன்கள் எடுத்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பார்படாஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் சார்பில் ரேணுகா சிங் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது இந்திய அணிக்கு 2ஆவது வெற்றியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஷவர்மா, பிரியாணி ஆபத்தான உணவுப் பொருளா? – விளக்கும் அரசு மருத்துவர்

Arivazhagan Chinnasamy

மீண்டும் தலை தூக்குகிறதா வெறுப்பு அரசியல்?

Web Editor

காதலியைச் சந்திக்க வாகனத்தில் எந்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்? மும்பை காவல்துறை பதில்

Halley Karthik