காமன்வெல்த் போட்டியில் எடைத்தூக்கும் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என 13 பதக்கங்களை வென்று 8வது இடத்தை பெற்றுள்ளது. 42 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலம் என மாத்தம் 106 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் 6வது நாளான இன்று ஆண்களுக்கான எடைத்தூக்கும் போட்டியில் இந்தியாவின் லப்பிரீத் சிங் வெண்கலம் வென்றுள்ளார். 109 கிலோ எடைபிரிவில் இவர் 355 கிலோ எடையை தூக்கி 3வது இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா இதுவரை 14 தங்கம் வென்றுள்ளது.