கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.  இதில் சிங்கம்…

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.  இதில் சிங்கம் சிலை வைப்பது குறித்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில்  ராமர் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அடிதடி வழக்கு,  கொலை வழக்காக மாற்றப்பட்டு இவ்வழக்கில் ராம்குமார்,  ராமர்,  ராஜேந்திரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.  மேலும் இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை,  காவல் ஆய்வாளர் சத்தியசீலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.