நடிகர் சூரியின் உணவகங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.   திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

மதுரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
 
திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மன்’ என்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து சென்றதால் அந்த உணவகத்தில் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி காணப்பட்டுள்ளது.
 இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் உணவு  பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்ககூடிய தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் செந்தில் தலைமையிலான வணிகவரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் சோதனை நடத்தியுள்ளனர். இச்சோதனையின் போது ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது உறுதியான நிலையில் மூன்று நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.