முக்கியச் செய்திகள் சினிமா

அஜித் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படங்கள் இடம் பெறும் எனவும், படத்திற்கு ‘துணிவு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான போனி கபூர் ஏகே 61 படத்தைத் தயாரித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூன் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ‘அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அஜித் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றதால், அஜித் இல்லாத படக்காட்சிகள் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் பிரம்மாண்டமான ஒரு வங்கி செட் அமைத்து அதில் படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது. ஏற்கனவே படத்தில் 70 சதவீத காட்சிகள் படமாக்கி முடித்து விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் சில காட்சிகள் விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகிய இடங்களில் படக்குழு படப்பிடிப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் சில முக்கியக் காட்சிகள் பாங்காக்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அதில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு ‘துணிவு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தங்கையின் தோழியை பைக்கில் அழைத்துச் சென்றதால் தகராறு: தடுக்க முயன்றவர் கொலை

Halley Karthik

கண்ணீரில் வெங்காய விவசாயிகள்; துயர்துடைக்க அரசு முன்வருமா?

EZHILARASAN D

இயக்குநர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார்

Gayathri Venkatesan