டெல்லிக்கு வாங்க… நயினார் நாகேந்திரனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு…!

தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளார்.

தமிழ் நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. முதலில் இயக்கம் ஒன்றை தொடங்கும் அண்ணாமலை பின்னர் அதனை கட்சியாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளார்.

டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன் இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நிதின் நபினை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.