மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக…

உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக வளர்ச்சித்துறையின் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெகன் கருப்பையா. இவர் கடந்த 8 ஆண்டுகளாக இக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவரது பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, சம்மந்தப்பட்ட மாணவியே, மதுரை மாவட்ட மகிளா
நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் இன்று பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை செக்காணூரணி போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கல்லூரியில் வேறு எந்த மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளாரா, இவருக்கு பேராசிரியர் மற்றும் மாணவர்கள் யாரும் உடந்தையாக இருந்துள்ளனரா என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி பொன்னி நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், கல்லூரி மாணவிக்கு 18 வயது நிரம்பாத சூழலில், பாலியல் தொல்லை அளித்தது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.