முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடுகளில் போலீசார் 5 மணி நேர சோதனையில் ஈடுபட்டு, 5 செல்போன்கள் மற்றும் 3 பென்டிரைவ்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் இறந்தவரின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தற்போது விசாரித்து வருகின்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கடந்த
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை வழக்கில் கைது செய்யப்பட்ட
அசாருதீன், இம்தியாஸ், ரிஸ்வான், ஷாஜித் அஹமது உள்ளிட்ட நான்கு பேரின் வீடுகளில் நீதிமன்ற அனுமதியுடன் காலை முதல் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து அதிரடியாக சோதனை நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த சோதனை நடைபெற்றதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் 3 பென்டிரைவ்களை பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். காலை முதல் நடைபெற்ற அதிரடி சோதனையால் முத்துப்பேட்டை பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்சிற்றம்பலம்: டெலிவரி ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

EZHILARASAN D

தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது எப்போது? மத்திய நிதியமைச்சர் பதில்

G SaravanaKumar

கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…

EZHILARASAN D