முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஓ.பி.சி இடஒதுக்கீடு; சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் – திமுக எம்.பி பி.வில்சன் கடிதம்

பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசன பிரிவு 16ல் திருத்தம் கொண்டு வரக்கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினரான பி.வில்சன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், ஒன்றிய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், ”உண்மையான சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவும், பதவி உயர்வுகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு சீனியாரிட்டியுடன் கூடிய இடஒதுக்கீடுகள் வழங்குவதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏனெனில், ஏற்கனவே அரசியலமைப்பு பிரிவு 16(4A) மற்றும் 16(4B) ஆகியவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆனால் ஓ.பி.சி பிரிவினருக்கு அவ்வாறு இல்லை.

இதனால் சமூகத்தில் பின்தங்கியுள்ள இந்த பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு பிரிவு16ல் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற பெண்ணின் தந்தை

Gayathri Venkatesan

நெல்லை சென்ற வி.கே.சசிகலா: உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்

Arivazhagan Chinnasamy

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D