வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறிய மக்னா யானை!

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து மக்னா யானை மீண்டும் மூன்றாவது முறையாக வெளியேறியுள்ளது. யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்…

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து மக்னா யானை மீண்டும் மூன்றாவது முறையாக வெளியேறியுள்ளது. யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு தர்மபுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா என்ற காட்டுயானை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியான டாப்ஸ்லிபில் கொண்டு யானையை விட்டனர்.

இந்நிலையில் இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது முறையாக அப்பகுதியில் இருந்து வெளியேறி கோவையை நோக்கி சென்றது. அதனை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் அதனுடம்பில் ரேடியோ காலர் கருவியை பொருத்தி வால்பாறையை அடுத்த மந்திரி மட்டம் என்ற வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

தொடர்ந்து யானை ரேடியோ காலர் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அக்கருவி பழுதானதால் யானையை கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி பகுதியிலுள்ள விவசாய தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமலிருக்க
வாகனம் மூல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை வாகனத்தை யானை பலமாக தாக்கியதில் வனத்துறையினர் ஆறு பேருக்கு சிறியதாக காயம் ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து சின்னதம்பி,ராஜவரதன்,முத்து என்ற மூன்று கும்பி யானைகள் கொன்றுவரப்பட்டு வனத்துறையினர் மக்ளாவின் நடமாட்டத்தை திவீரமாக கண்காணித்து வருகின்றனர். யானையின் நடமாட்டத்தால் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

———வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.