புத்தாண்டையொட்டி ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா – ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் எறிந்து நூதன வழிபாடு!

புத்தாண்டையொட்டி ஒசூரில் உள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.   இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எறிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர். ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி…

புத்தாண்டையொட்டி ஒசூரில் உள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.   இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எறிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர்.

ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் இன்று 66-ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.   ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.   அந்த வகையில்  இன்று (ஜன.1) நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:  ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன? 

பின்னர் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும், ஆஞ்சநேயர் சாமியின் மீது எறிந்து வழிபாடு நடத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.

புத்தாண்டு பிறக்கும் போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் கடலைக்காயை அவர் மீது எறிந்து வழிபட்டால் நாடு செழிக்கும், விவசாயம் செழிக்கும் என்பது
நம்பிக்கையாக உள்ளது.  அதன்படி இந்த திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்ட தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.