முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வாகனம்

இனி கார்களில் கட்டாயம் ஏர் பேக்!!! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், ஆகஸ்ட் 31, 2021 முதல் ஏற்கனவே உள்ள அனைத்து கார்களின் ஓட்டுநர், முன் பக்க பயணி இருக்கைகளிலும் ஏர் பேக் பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யபடும் ஒரு சில கார் நிறுவனங்கள் தற்போது காரின் முன் பகுதி பயணியின் இருக்கைக்கும் ஏர்பேக் பொருதப்பட்டு வெளியிட்டு வருகிறது. மாருதி சுசுகி ஆல்டோ, மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி சுசுகி செலிரியோ, மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சாண்ட்ரோ, ரெனால்ட் க்விட், டாட்சன் ரெடி-கோ மற்றும் மஹிந்திரா பொலெரோ போன்ற கார் நிறுவனங்கள் இந்த புதிய பயணி இருக்கை ஏர்பேக் முறையை அறிமுகபடுத்தியுள்ளது.

இனி புதியதாக வெளிவரக் கூடிய கார்கள் அனைத்திற்கும் ஏப்ரல்1, 2021 முதல் வெளிவரக்கூடிய புதிய கார்களின் முன் பக்கம் இரண்டு ஏர் பேக் கட்டாயமாக பொருத்தவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 2020-ல் சாலை போக்குவரத்து,நெடுஞ்சாலை அமைச்சகம், ஜூன் 1, 2021 முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் முன் பக்கம் பயணிக்கும் ஏர்பேக் கட்டாயம் என உத்தரவு பிறபித்தது.

முன் பகுதியில் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஒரு ஏர்பேக் என்பது போதுமானதாக இல்லை. விபத்து நடைபெறும் சமயங்களில் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்படுவதையோ அல்லது உயிரிழப்பு ஏற்படுவதையோ மட்டும் இது தவிர்த்து விடுகிறது, ஆனால் முன் பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கு ஏர் பேக் இல்லாததால், விபத்தின் போது படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம். எனவே தற்போது முன் இருக்கையில் பயணிக்கும் இருக்கையின் முன்பக்கத்திலும் ஏர்பேக் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு காரணமாக புதியதாக வரவுள்ள கார்களின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!

Gayathri Venkatesan

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி

Nandhakumar

புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசை

Halley karthi