லண்டன் பேஷன் வீக் ஷோவில் இடம்பெற்ற லடாக்கின் பாரம்பரிய ஆடைகள்!

லண்டனில் நடைபெற்றுவரும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் லடாக்கின் பாரம்பரிய ஆடைகள் இடம்பெற்றுள்ளது. லடாக்கைச் சேர்ந்த தொழில் முனைவோர்களான பத்மா யாங்சன் (31) ஜிக்மத் திஸ்கத் (32) ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திவரும் Namza Couture…

லண்டனில் நடைபெற்றுவரும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் லடாக்கின் பாரம்பரிய ஆடைகள் இடம்பெற்றுள்ளது.

லடாக்கைச் சேர்ந்த தொழில் முனைவோர்களான பத்மா யாங்சன் (31) ஜிக்மத் திஸ்கத் (32) ஆகிய இருவரும் சேர்ந்து நடத்திவரும் Namza Couture என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக இந்த ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

லடாக்கில் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான Namza Couture, பஷ்மினா ஆடை உள்பட பல பிரபல காஷ்மீரி ஆடைகளை, ஆடு, யாக் எருது, ஒட்டகம் ஆகிய மிருகங்களின் தோல்களில் இருந்து தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் கம்பளிகள் மிகவும் தனித்துவமானதாகும்.

இந்த நிறுவனத்தில் பல்வேறு கைத்தறி கலைஞர்களை கொண்டு ஆடைகள் விதவிதமாக டிசைன் செய்யப்படுவது கூடுதல் சிறப்பாக பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஆடைகளில் இயற்கை சாயங்கள்பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் இந்த ஆடை ரகங்கள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் லண்டன் பேஷன் வீக் ஷோ என்று கூறப்படும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில், Namza Couture தயாரித்த பாரம்பரிய லடாக் ஆடைகள் இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து பத்மா, ஜிக்மத்திற்கு கூறுகையில், “இந்த நிகழ்வு எங்களின் ஆடை உற்பத்தி துறையில் புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. இது மென்மேலும் வளர புதிய உத்வேகத்தையும் தந்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.