பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக,…

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக கட்சி இதுவரை பாமகவுக்கு 23 தொகுதிகளையும், பிஜேபிக்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது.

திமுக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.