முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டிருப்பது இந்திய சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு பேரியக்கமாக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இந்திய சாதனை என்றும், இதுவரை 4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இமாலய சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல் வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள், செவிலியர்க்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், செலுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என தெரிவித் துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்: ராஜேந்திர பாலாஜி!

Halley karthi

சம்பளத்தை மீண்டும் உயர்த்தினாரா விஜய்யின் ’பீஸ்ட்’ ஹீரோயின்?

Gayathri Venkatesan

இன்று பதவியேற்கின்றனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்… விழாக்கோலம் பூண்டுள்ள அமெரிக்கா!

Saravana