சட்டமன்ற தேர்தலில் 190 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய திமுக, 124 இடங் களில் சுருண்டதற்கு நாம் தமிழர் கட்சிதான் காரணம் என அதன் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை – போரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், சங்க காலம் தொட்டு தமிழரா, திராவிடரா? என்ற இன அரசியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது பேசிய சீமான், சட்டமன்ற தேர்தலில், திமுகவின் திராவிட கருத்தியலுக்காக மக்கள் வாக்களித்தார்கள் என்றால், பிரஷாந்த் கிஷோர் எதற்கு என கேள்வி எழுப்பினார்.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என இப்போது கூறும், திமுக, இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பள்ளி ,கல்லூரி அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதித்த அரசால், டாஸ்மாக் மதுக்கடையை மட்டும் மூடவில்லை என சீமான் சாடினார்.







