முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் 130 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஆக்சிஜன் செரிவூட்டிகள், நாடித்துடிப்பு அறியும் கருவிகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தாமோ அன்பரசன், மக்களவை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்

“சசிகலாவுக்கு எதிரான அபராதத்தை கைவிட முடியாது“-வருமான வரித்துறை

Halley karthi

“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

Gayathri Venkatesan