தொழில்துறையினரின் பங்களிப்பு அவசியம்:முதல்வர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், அதில் இருந்து மக்கள் மீண்டு வர, தொழில் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், அதில் இருந்து மக்கள் மீண்டு வர, தொழில் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்படுவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கச் செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், தொழில்துறையினருடன் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிவிஎஸ், இந்தியா சிமெண்ட்ஸ், ஹூண்டாய், நிசான், சிஐஐ, பிக்கி, உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் அதில் இருந்து மீண்டு வர தொழில்துறையினர் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றின் தேவையை நிறைவு நிறைவு செய்ய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.