உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’…

உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’ நிகழ்வு சென்னை அசோக் நகரில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈழப்போரில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஈழத் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி அனைவரும் கைகோர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி போன்ற வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.