தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழிற் அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.…

கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழிற் அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.