முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் மே18ம் தேதி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு தடை காரணமாக அவரவர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நினைவேந்தலை கடைபிடித்தனர். இதில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்தவருடம் நினைவேந்தலை தடை செய்யும் நோக்கிலும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடை செய்யவும் மேற்கொள்ளப்பட்ட அராஜகமான செயற்பாடே என்று நினைவு முற்றத்தில் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்தி தடை விதித்துள்ள போது மக்களும், அரசியல் தலைவர்களும் தத்தமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நினைவேந்தலை கடைப்பிடித்தனர்.

Advertisement:

Related posts

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை

Karthick

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Karthick

“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா

Karthick