மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு

திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி,…

திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை மனப்பாடமாக ஒப்பித்து அசத்தி வருகிறார்.

மேலும் உலக நாடுகளின் பெயர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகளையும் அழகு நடையில் சொல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சிறுவனின் சாதனையைப் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை சென்றிருந்த போது சிறுவனுக்குப் பரிசு வழங்கினார்.

இந்நிலையில், சிறுவன் ராகுல் ராமை சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பாராட்டுத் தெரிவித்தார். அப்போது, சிறுவனின் குரலில் திருக்குறள், நாலடியார் பாடல்களை கேட்டு மகிழ்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.